Thursday 11 August 2011

தோசையம்மா தோசை!!

தோசை !! இந்த வார்த்தையை கேட்கும் பலருக்கும் பசி வரத்தான் செய்யும் .. இந்த ஐட்டதிற்கு  அடிமைகள் பலர்.  என்னதான் தமிழனின் பாரம்பரிய உணவு இட்லியாக  இருந்தாலும் , தோசைக்கு உள்ள மௌசே தனிதான் .  பெரும்பாலோனோரின் காலை டிபன் தோசையாக தான் இருக்கிறது .
அப்படிப்பட்ட  தோசையானது தோன்றிய இடம் தோராயமாக  கர்நாடக மாநிலம் மைசூர் தான்.அங்கே அதன் பெயர் செட் தோசா . ஒரு செட் தோச சாப்பிட்டால் அன்று முழுவதும் பசிக்காது என்பது ஆன்றோர்களின் வாக்கு  . ஊரன் வீடு நெய்யே  என் பொண்டாட்டி கையே என்கின்ற மாதிரி, 
 பெயர் கிடைத்தது என்னவோ  உடுபிக்கு தான்  .. தோசை என்றால் உடுப்பி , உடுப்பி என்றால் தோசை . அங்கே  கண்டுபிடிக்கப்பட்டதுதான் மசால் தோசை . அதனால் தான் என்னவோ டிபன் என்றாலே உடுப்பி ஹோட்டல் தான் என்று ஸ்ரீரங்கத்து மாமாக்களும் ,கும்பகோணத்து தாத்தகளும் சொல்வதுண்டு . நீங்கள் போய் "மாமா என்ன சப்டேள் ?" என்று கேளுங்கள்  . "ஒரு நெய் ரோஸ்ட்  அப்புறம் ஒரு காபி" என்று தான் பதில் வரும் . முயற்சி செய்து பாருங்கள்.
நம் ஊரில் விளக்குமாறால் சுத்தம் செய்த கல்லில் பெருசாக ஊற்றி லேசாக என்னையா நெய்யோ போட்டு திருப்பி எடுத்தால் வேலை முடிந்தது . அனால் மற்ற மாநிலங்களில் முறை வேறாம் .ஆந்த்ராவில் அதன் பெயர்  பெசரட்டு . அங்கயே அட்டு என்று ஒரு வகை உண்டு  ஆளை மயக்கிவிடுமாம் . ஒரிசாவில் கூட இதன் வேறு வடிவம் புழக்கத்தில் உள்ளதாக கேள்வி . அதன் பெயர்  காக்கார  பிட்டா  என்ற இனிப்பு தோசை .
மேற்கத்திய காலச்சாரம் இங்கு வந்த பிறகு அதன் வகைகள் அதிகரித்தன .
paneer butter dosa, mushroom masal dosa, spinach dosa , green peas dosa , navadhaniya dosa ,noodles dosa , mint dosa  இன்னும் பலப்பல .
தோசைக்காக எதையும்  செய்ய துணிபவரில் அடியேனும் ஒருவன் .
சொல்ல வந்த செய்தி இது தான் . தோசை திருவிழா ஒன்றிக்கு சென்றோம் . மழைநேரம் ஆதலால் கூட்டம் இருக்காது என்ற நினைப்புடன் சென்றால் அங்கே ஒரு படையே காத்திருந்தது . நாங்கள் போனதிற்கான காரணம் இது தான் .வீட்டில் இருந்த படிக்க சொல்லி பிராணனை பிடுங்குவார்கள் அதுவும் அல்லாமல் , தொண்ணுற்று ஒன்பது ரூபாய்க்கு அளவிலா தோசைகள் சாப்பிடலாம் .cheap and best .

அத்துணை வகையும் இருந்தது .
உள்ளே சென்றோம் தட்டை எடுத்துகொண்டோம் .வரிசையாக தோசைகளை பதம் பார்க்க  தொடங்கினோம் 
மேல குறிப்பிட்ட அத்துணை வகையும் இருந்தது , த்வம்சம் செய்தோம் .
தண்ணி குடித்தால் வயிறு நிரம்பிவிடும் என்று விக்கல எடுத்து செத்தாலும் பரவாயில்லை ,இனிமேல் அவன் தோசை திருவிழாவே நடத்த கூடாது என்ற ரீதயில் சாப்பிட்டோம் . நடுவில்  பேசிய அரவிந்தை தடுத்து நிறுத்தி  "டே சாப்டும் போது பேசாதடா . காத்து  உள்ள போய்ட போகுது" என்று கூறி விட்டு மேலே தொடர்ந்தோம் . சாப்பிட்ட களிப்பில் என்னால் நடக்க கூட முடியவில்லை, ஜோஹ்ன்சனை கைத்தாங்கலாக பிடித்து கொண்டு கை அலம்பிவிடு வந்தேன் .

" வாயை திறந்தால் காக்கா  கொத்திக்கொண்டு போகும் அளவுக்கு உண்டேன் ".
என் வாழ்நாளில்  அப்படி சாப்பிட்டதே இல்லை ..
அனால் கடப்பவும் , கும்பகோணம் கொஜ்ஜுவும் "மிஸ் "ஆகியது தான் வருத்தம் , ஏன் எனில் ஊத்தாபதிர்ற்கு   கடப்பாவை ஊற்றி ஊறவைத்து சாப்பிடும்  ரகம் நான் .
என்ன காபி தான் குடிக்கவில்லை . கஷ்டமாக இருந்தது .
அடுத்தது உணவுதிருவிழவிர்ற்கு போகலாம் என்று திட்டம் . அன்பர்கள் வருவதாக இருந்தால் சொல்லவும் . 
ஆனந்தாமாக  உண்டு வரலாம்  .!!!

Thursday 2 June 2011

ஜெஸ்ஸிகாவை கொன்றது யார் ????


ஏப்ரல்29,1999.ஒரு பார்டி கூட்டத்தில் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு ஜெசிக்கா லால் என்ற மாடல் மீது பாய்ந்து பெரிய பிரச்சனைகளை உருவாக்குகின்றது.

இதனால் கைது செய்யப்படும் ஒரு மந்திரியின் மகனை வழக்கிலிருந்து பல 
லட்சம் செலவு செய்து வெளிக்கொண்டு வருகிறது செல்வாக்கு.
சாட்சிகள் மழுங்கடிக்கப்படுகின்றன.
 பணம் மற்றும் பலம் மூலம்,ஆறு வருட இழுத்தடிப்பிற்கு பின்னர் 
"NO ONE KILLED JESSICA" என்று தலைப்பு செய்திகள் வெளிவந்து 
அரசியல்வாதிகளின் பலத்தை நிரூபிக்கின்றது ..
இதனால் மனம் துவண்டு போகும் மாடலின் அக்கா (VIDYA BALAN)  
மனமுடைந்து போகிறார் .. 
அவர் தாயார் இறந்துவிடுகிறார் .
இச் சம்பவத்தை மீண்டும் துருவி எடுத்து நேர்மையை நிலைநாட்டுகிறார் NDTVபத்திரிகையாளர் மீரா ..(RANI MUKARJEE)..
படம் முழவதும்  விறுவிறுப்பு .
நடிப்பில் ராணியும் வித்யாவும் ஒருவரி ஒருவர் மிஞ்சுகின்றனார் .. அரசில் உலகை இப்படம் மீண்டும் வெளிச்சமிட்டு காட்டிவிட்டது .கச்சிதம் . குப்தாவிற்கு பாராட்டுக்கள். போலீஸ் அதிகாரியக வருபவர் நடிப்பில் குறிப்பிடபடவேண்டியவர் .
கோ படம் ஒரு எல்லை  என்றால் இப்படம் மீடியாவின் மற்றோர் எல்லையை காட்டுகின்றது. 
ஆனாலும் படத்தில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன ..
படத்தில் வரும் கெட்ட வாரத்தைகள் .. அனாவசியமான படுக்கை காட்சி ஒன்று போன்றவை சலிப்பூட்டுகின்றன . .  திரைக்கதை சூப்பர் .
ஆவசியம் பார்க்கவேண்டிய படம் .
RATING : 3.4/5

Sunday 29 May 2011

ஒரு அன்பான வேண்டுகோள் !!! (#5)

ஒரு வேண்டுகோள் : கண்ணா பின்னாவென்று எழுதாதே என்று சிலர் சொல்கிறார்கள் .. 
"குத்துங்க எஜமான் "என்ற பத்தியில் நான் எழுதியதை எவ்வளவு  தப்பர்த்தம் பண்ணி கொள்ள முடியுமோ அவ்வளவு தப்பர்த்தம் செய்து செய்துகொண்டிருகிறார்கள் ... நான் இங்கு எழுதுவதை பற்றி இப்போதே சொல்லிவிடுகிறேன் .. நான் எழுதுவது ஒருவிதமான eclectic writing என்ற வகையை சார்ந்தது ...அதாவது எதைவேண்டுமாநலம் எழுதலாம். எங்கிருந்து வேண்டுமானலும், தொடங்கலாம் முடிக்கலாம் .. ஒரு காட்டாறு போல வரையறை இல்லாத எழுத்துகள் ....இன்றைய காலகட்டத்தில் ஒருவனுக்கு  எதையுமே விரிவாக சொன்னால் சத்தியமாக பிடிக்காது ..fast foodகூட  சாப்பிட நேரம் இல்லாமல் அலையும் ஒரு காலகட்டம் ,, அதிலும் என்னை போன்ற மாணவர்கள்   ஒரு அளவுக்கு மேல் சொன்னால் அதன் பெயர் "" மொக்கை"" என்று கூறிவிடுவார்கள் ...so let it be short sweet and crisp 
..
Example:
கம்பராமாயணத்தில் பரதனுக்கு ராஜ்யம் கிடைத்ததை பற்றி கம்பர் ஒரு பதிகமே கூறியுள்ளார்,, ஆனால் நம் கவிஞர் வாலி அவர்கள் நான்கே வார்த்தைகளில் 

"பரதனுக்கு ராஜ்ஜியம் .ராமனுக்கு பூஜ்யம்" என்று கூறினால் எளிதாக விளங்கிவிடுகின்றது .. 
அதை செய்யாதான் விருப்பப்படுகின்றேன் ..
 உங்கள் ஆசிகளுடனும் வாழ்த்துகளுடனும் ... 
                                       என்றும் உங்கள் அன்பன் வருண் ... 
                                                           நன்றி !!!

அசத்தும் ஐ போன் 4 (#4)

"Design is not just what it looks like and feels like. Design is how it works."
இந்த வரிகளை சொல்லியவர் இன்று தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஒரு நிறுவனத்தை நிறுவியவர் ..அவர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ் ... அந்த நிறுவனத்தின் பெயர் ஆப்பிள் (Apple )

மிகவும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்திருகிறது ஐ போன் 4 .
எளிமையான கருப்பு டி சர்ட்டுடன் வந்து அதன் சிறப்பு அம்சங்களை கூறி launch  செய்தார் .
simplicity  என்பதன் எடுத்துகாட்டு ஸ்டீவ் .
சரி நாம் விஷயத்துக்கு வருவோம்..
I PHONE 4ல்  அப்படி என்னதான் இருக்கிறது..ஸ்டீவ் சொல்லிய அறிக்கையின்விவரம் பின்வருமாறு 
I PHONE 4: FEATURES :
  1. Earths most thinnest smart phone:உலகின் மெலிதான ஸ்மார்ட் போன் .....9.3mm display..முந்தைய ஐ போனனை விட 24% மெலிதானது
  2. Retina display : 960 X 640 பிக்சல் Retina displayயுடன் கூடியது  
  3. 5 மெகா பிக்சல் கேமரா ...led flash  வசதி .. 5X டிஜிட்டல் ஜூம் . tap to focus தொழில்நுட்பம்.
  4. 720 pixels வீடியோ  ரெகார்டிங் வசதிமூலம் ஒரு டாகுமெண்டரி படத்தை சர்வ சாதாரணமாக எடுக்க முடியும் என்று கூறியுள்ளது NY TIMES ..
  5. 300hrs battery standby. 7 மணி நேரம் 3G டாக் டைம் ,wifi browsing..40 hrs மியூசிக் ..10hrs வீடியோ play back 
  6. GYROSCOPE கேம் விளையாட (இதை பற்றி தனியாக பதிவு எழுதிகிறேன் )
இன்னும் ஏராளம் ,... 
விலை : 16GB 34,500]
                   32 GB 40,900
                                         பின் குறிப்பு :
      இதை எனக்கு பரிசாக அளிப்பவர்கள் ஸ்ரீ ரங்கம் அருள்மிகு ரங்கநாதருடைய ஆசியுடன் பல்லாண்டு காலம் வாழட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் ..

Saturday 28 May 2011

குத்துங்க எஜமான் குத்துங்க !!!! (# 1) # 3


சிகப்பு ரோஜா படத்தில் வந்த இவ்வரி மிகவும் பிரபலமான ஒன்று.
பெண்களை பற்றிய உண்மைகளை விளிக்கும் இவ்வரிகள் பாரதி ராஜா காலத்தில் மட்டும் அல்ல, சித்தர்கள் காலத்தில் இருந்தே வந்தவை .
அனைத்து சித்தர் பெருமக்களும் பெண்களை வெறுத்தனர் . அதில் டாப் சித்தர்கள் 
1.   பாம்பாட்டி சித்தர் 
2.   பட்டினத்தார் 
3.   திருமூலர் 
பாம்பாட்டி சித்தர் எழுதிய பாடல்கள் மிகவும் பிரபலம்.நீங்கள் நிச்சயமாக கேட்டிருக்க கூடும். ஆடு பாம்பே என்ற பழைய  பாடல் உங்களுக்கு தெரியும் .

சில உதாரணங்கள் :

பாடல் :
மலஞ்ச்சொரி கண்ணை வடிவாளுக் கொப்பாக
வருணித்துச் சொல்வர் மதிவன்மை இல்லாதார் 
குலநலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள் 
கும்பிக்கே இறையென்று ஆடு பாம்பே 

அர்த்தம் : சைட் அடிப்பதில் தான் எத்துனை ஆனந்தம் . லவ் பண்றவண்ட கேளுங்க  ..கத கதையா சொல்வான்.
பூளை  தள்ளும்  கண்களை சண்ட போட்ற  கத்தினு சொல்லுவான் 
கும்முன்னு இருக்கா ....சேட்டையா இருக்காடா ....
சம்பந்தமே இல்லாம பேசுவான். அப்டிபட்டவன் நாசமா போய்டுவன் .அயோக்க்ய பயலா மாறிறுவான் அப்டின்னு நம்ப பாம்பாட்டி சித்தர் சொல்லிருக்கார் 
..மத்தவங்க என்ன சொன்னாங்க ????
நாளைக்கு பாக்கலாமா

பாரதியார் பாடல் # 1



நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி,சிவசக்தி!-என்னை
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீ சுடினும்-சிவ
சக்தியை பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுலதோ?.

Friday 27 May 2011

முதல் புத்தகம் ( #1)


லைப்பூவிற்கு வருகை தந்துள்ள வாசகர்களுக்கு சுஜாதாதாசனின் வணக்கங்கள் .
ஒருவருக்கு தன்  வாழ்கையில் படித்த அத்தனை புத்தகமும் நினைவில் இருக்குமா என்பது சந்தேகம் தான் அனால் முதல் புத்தகம் ???
கட்டாயமாக நினைவில் இருக்க கூடிய ஒன்று தான் !!

எல்லோர்க்கும் அப்படி இருக்க நான் என்ன விதி விலக்கா !!
என் குணத்தையும் என்னையும் மாற்றி அமைத்த பெருமை  ஒருவரைத்தான்  சேரும் ...
அவர் பெயர் ரங்கராஜன் என்கின்ற சுஜாதா ...
சிங்கார சென்னையில் பிறந்து சீர்மிகு திருவரங்கத்தில் வளர்ந்த மாமேதை .
அவருடைய வாழ்கைச் சம்பவங்களின் 
அணிவகுப்புத்தான் "ஸ்ரீரங்கத்து தேவதைகள் "

ஸ்ரீரங்கத்து தேவதைகள் :
 திருமங்கை ஆழ்வார் எழுதிய பெரியதிருமொழி பாசுரத்தோடு தொடங்குகிறது முதல் சிறுகதை !!! 
புத்தகம் முழுவதும் உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க ஒரு தனி  புலனாய்வு துறையே தேவை.
காதல் , கலாட்டா ,கண்ணீர் ,கவலை ,அனைத்தும்  கலந்த கதைகள் ..
படிக்க படிக்க பேரின்பம்..
ஸ்ரீரங்கத்து  வீதிகளை அவர் வர்ணிக்கும் முறை , கோயில் செய்திகள் , பாட்டியிடம் பயப்படுதல், படம், பாடம் , பள்ளியில் நடந்த கூத்துகள் என புத்தகம் முழுவதுமே கலக்கல் தான் 
.சுஜாதா என்றும் சுஜாதா தான் .. 
ஒவ்வொரு கதையிலும் கடைசியில் ஒரு ட்விஸ்ட் இருக்கும் .யாராலும் யூகிக்கவே  முடியாத கதைகள் .. அதகளம் தான் ...

சிறந்த கதைகள்  : மாஞ்சு , மறு 

தூர்தர்ஷனில் இக்கதைகளை குறும்படமாக்கினார்கள்  .
அவற்றின் குறுந்தகடுகளை வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் .செய்வார்களா ???

vedict :கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று ..

கிடைக்கும் இடம் : இந்த புத்தகத்தை புதிதாக எழுதிய கதைகளுடன்  சேர்த்து புதிய பதிப்பாக உயிர்மையில் வெளியிடுள்ளர்கள்
..
விலை : 300
UYIRMMAI 
1/29 Subramaniyan street 
Abiramapuram 
Chennai-600018. 
Tamil nadu 
India 

Tele/fax: 91-44-24993448 
e-mail: sales@uyirmmai. com 
            editor@uyirmmai.com