Thursday, 11 August 2011

தோசையம்மா தோசை!!

தோசை !! இந்த வார்த்தையை கேட்கும் பலருக்கும் பசி வரத்தான் செய்யும் .. இந்த ஐட்டதிற்கு  அடிமைகள் பலர்.  என்னதான் தமிழனின் பாரம்பரிய உணவு இட்லியாக  இருந்தாலும் , தோசைக்கு உள்ள மௌசே தனிதான் .  பெரும்பாலோனோரின் காலை டிபன் தோசையாக தான் இருக்கிறது .
அப்படிப்பட்ட  தோசையானது தோன்றிய இடம் தோராயமாக  கர்நாடக மாநிலம் மைசூர் தான்.அங்கே அதன் பெயர் செட் தோசா . ஒரு செட் தோச சாப்பிட்டால் அன்று முழுவதும் பசிக்காது என்பது ஆன்றோர்களின் வாக்கு  . ஊரன் வீடு நெய்யே  என் பொண்டாட்டி கையே என்கின்ற மாதிரி, 
 பெயர் கிடைத்தது என்னவோ  உடுபிக்கு தான்  .. தோசை என்றால் உடுப்பி , உடுப்பி என்றால் தோசை . அங்கே  கண்டுபிடிக்கப்பட்டதுதான் மசால் தோசை . அதனால் தான் என்னவோ டிபன் என்றாலே உடுப்பி ஹோட்டல் தான் என்று ஸ்ரீரங்கத்து மாமாக்களும் ,கும்பகோணத்து தாத்தகளும் சொல்வதுண்டு . நீங்கள் போய் "மாமா என்ன சப்டேள் ?" என்று கேளுங்கள்  . "ஒரு நெய் ரோஸ்ட்  அப்புறம் ஒரு காபி" என்று தான் பதில் வரும் . முயற்சி செய்து பாருங்கள்.
நம் ஊரில் விளக்குமாறால் சுத்தம் செய்த கல்லில் பெருசாக ஊற்றி லேசாக என்னையா நெய்யோ போட்டு திருப்பி எடுத்தால் வேலை முடிந்தது . அனால் மற்ற மாநிலங்களில் முறை வேறாம் .ஆந்த்ராவில் அதன் பெயர்  பெசரட்டு . அங்கயே அட்டு என்று ஒரு வகை உண்டு  ஆளை மயக்கிவிடுமாம் . ஒரிசாவில் கூட இதன் வேறு வடிவம் புழக்கத்தில் உள்ளதாக கேள்வி . அதன் பெயர்  காக்கார  பிட்டா  என்ற இனிப்பு தோசை .
மேற்கத்திய காலச்சாரம் இங்கு வந்த பிறகு அதன் வகைகள் அதிகரித்தன .
paneer butter dosa, mushroom masal dosa, spinach dosa , green peas dosa , navadhaniya dosa ,noodles dosa , mint dosa  இன்னும் பலப்பல .
தோசைக்காக எதையும்  செய்ய துணிபவரில் அடியேனும் ஒருவன் .
சொல்ல வந்த செய்தி இது தான் . தோசை திருவிழா ஒன்றிக்கு சென்றோம் . மழைநேரம் ஆதலால் கூட்டம் இருக்காது என்ற நினைப்புடன் சென்றால் அங்கே ஒரு படையே காத்திருந்தது . நாங்கள் போனதிற்கான காரணம் இது தான் .வீட்டில் இருந்த படிக்க சொல்லி பிராணனை பிடுங்குவார்கள் அதுவும் அல்லாமல் , தொண்ணுற்று ஒன்பது ரூபாய்க்கு அளவிலா தோசைகள் சாப்பிடலாம் .cheap and best .

அத்துணை வகையும் இருந்தது .
உள்ளே சென்றோம் தட்டை எடுத்துகொண்டோம் .வரிசையாக தோசைகளை பதம் பார்க்க  தொடங்கினோம் 
மேல குறிப்பிட்ட அத்துணை வகையும் இருந்தது , த்வம்சம் செய்தோம் .
தண்ணி குடித்தால் வயிறு நிரம்பிவிடும் என்று விக்கல எடுத்து செத்தாலும் பரவாயில்லை ,இனிமேல் அவன் தோசை திருவிழாவே நடத்த கூடாது என்ற ரீதயில் சாப்பிட்டோம் . நடுவில்  பேசிய அரவிந்தை தடுத்து நிறுத்தி  "டே சாப்டும் போது பேசாதடா . காத்து  உள்ள போய்ட போகுது" என்று கூறி விட்டு மேலே தொடர்ந்தோம் . சாப்பிட்ட களிப்பில் என்னால் நடக்க கூட முடியவில்லை, ஜோஹ்ன்சனை கைத்தாங்கலாக பிடித்து கொண்டு கை அலம்பிவிடு வந்தேன் .

" வாயை திறந்தால் காக்கா  கொத்திக்கொண்டு போகும் அளவுக்கு உண்டேன் ".
என் வாழ்நாளில்  அப்படி சாப்பிட்டதே இல்லை ..
அனால் கடப்பவும் , கும்பகோணம் கொஜ்ஜுவும் "மிஸ் "ஆகியது தான் வருத்தம் , ஏன் எனில் ஊத்தாபதிர்ற்கு   கடப்பாவை ஊற்றி ஊறவைத்து சாப்பிடும்  ரகம் நான் .
என்ன காபி தான் குடிக்கவில்லை . கஷ்டமாக இருந்தது .
அடுத்தது உணவுதிருவிழவிர்ற்கு போகலாம் என்று திட்டம் . அன்பர்கள் வருவதாக இருந்தால் சொல்லவும் . 
ஆனந்தாமாக  உண்டு வரலாம்  .!!!

No comments:

Post a Comment