சிகப்பு ரோஜா படத்தில் வந்த இவ்வரி மிகவும் பிரபலமான ஒன்று.
பெண்களை பற்றிய உண்மைகளை விளிக்கும் இவ்வரிகள் பாரதி ராஜா காலத்தில் மட்டும் அல்ல, சித்தர்கள் காலத்தில் இருந்தே வந்தவை .
அனைத்து சித்தர் பெருமக்களும் பெண்களை வெறுத்தனர் . அதில் டாப் சித்தர்கள்
1. பாம்பாட்டி சித்தர்
2. பட்டினத்தார்
3. திருமூலர்
பாம்பாட்டி சித்தர் எழுதிய பாடல்கள் மிகவும் பிரபலம்.நீங்கள் நிச்சயமாக கேட்டிருக்க கூடும். ஆடு பாம்பே என்ற பழைய பாடல் உங்களுக்கு தெரியும் .
சில உதாரணங்கள் :
பாடல் :
மலஞ்ச்சொரி கண்ணை வடிவாளுக் கொப்பாக
வருணித்துச் சொல்வர் மதிவன்மை இல்லாதார்
குலநலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள்
கும்பிக்கே இறையென்று ஆடு பாம்பே
அர்த்தம் : சைட் அடிப்பதில் தான் எத்துனை ஆனந்தம் . லவ் பண்றவண்ட கேளுங்க ..கத கதையா சொல்வான்.
பூளை தள்ளும் கண்களை சண்ட போட்ற கத்தினு சொல்லுவான்
கும்முன்னு இருக்கா ....சேட்டையா இருக்காடா ....
சம்பந்தமே இல்லாம பேசுவான். அப்டிபட்டவன் நாசமா போய்டுவன் .அயோக்க்ய பயலா மாறிறுவான் அப்டின்னு நம்ப பாம்பாட்டி சித்தர் சொல்லிருக்கார்
..மத்தவங்க என்ன சொன்னாங்க ????
நாளைக்கு பாக்கலாமா
No comments:
Post a Comment