Friday, 27 May 2011

முதல் புத்தகம் ( #1)


லைப்பூவிற்கு வருகை தந்துள்ள வாசகர்களுக்கு சுஜாதாதாசனின் வணக்கங்கள் .
ஒருவருக்கு தன்  வாழ்கையில் படித்த அத்தனை புத்தகமும் நினைவில் இருக்குமா என்பது சந்தேகம் தான் அனால் முதல் புத்தகம் ???
கட்டாயமாக நினைவில் இருக்க கூடிய ஒன்று தான் !!

எல்லோர்க்கும் அப்படி இருக்க நான் என்ன விதி விலக்கா !!
என் குணத்தையும் என்னையும் மாற்றி அமைத்த பெருமை  ஒருவரைத்தான்  சேரும் ...
அவர் பெயர் ரங்கராஜன் என்கின்ற சுஜாதா ...
சிங்கார சென்னையில் பிறந்து சீர்மிகு திருவரங்கத்தில் வளர்ந்த மாமேதை .
அவருடைய வாழ்கைச் சம்பவங்களின் 
அணிவகுப்புத்தான் "ஸ்ரீரங்கத்து தேவதைகள் "

ஸ்ரீரங்கத்து தேவதைகள் :
 திருமங்கை ஆழ்வார் எழுதிய பெரியதிருமொழி பாசுரத்தோடு தொடங்குகிறது முதல் சிறுகதை !!! 
புத்தகம் முழுவதும் உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க ஒரு தனி  புலனாய்வு துறையே தேவை.
காதல் , கலாட்டா ,கண்ணீர் ,கவலை ,அனைத்தும்  கலந்த கதைகள் ..
படிக்க படிக்க பேரின்பம்..
ஸ்ரீரங்கத்து  வீதிகளை அவர் வர்ணிக்கும் முறை , கோயில் செய்திகள் , பாட்டியிடம் பயப்படுதல், படம், பாடம் , பள்ளியில் நடந்த கூத்துகள் என புத்தகம் முழுவதுமே கலக்கல் தான் 
.சுஜாதா என்றும் சுஜாதா தான் .. 
ஒவ்வொரு கதையிலும் கடைசியில் ஒரு ட்விஸ்ட் இருக்கும் .யாராலும் யூகிக்கவே  முடியாத கதைகள் .. அதகளம் தான் ...

சிறந்த கதைகள்  : மாஞ்சு , மறு 

தூர்தர்ஷனில் இக்கதைகளை குறும்படமாக்கினார்கள்  .
அவற்றின் குறுந்தகடுகளை வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் .செய்வார்களா ???

vedict :கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று ..

கிடைக்கும் இடம் : இந்த புத்தகத்தை புதிதாக எழுதிய கதைகளுடன்  சேர்த்து புதிய பதிப்பாக உயிர்மையில் வெளியிடுள்ளர்கள்
..
விலை : 300
UYIRMMAI 
1/29 Subramaniyan street 
Abiramapuram 
Chennai-600018. 
Tamil nadu 
India 

Tele/fax: 91-44-24993448 
e-mail: sales@uyirmmai. com 
            editor@uyirmmai.com




No comments:

Post a Comment